Showing posts with label கோழி. Show all posts
Showing posts with label கோழி. Show all posts

Sunday, November 7, 2010

கொங்கு நாட்டு கோழி குழம்பு /காளான் குழம்பு

காளான் குழம்பு (Mushroom kuzhambu)
தேவையானவை
• காளான் - 1/4 கிலோ
• வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
• கறிவேப்பிலை - சிறிது
• கடுகு
• உப்பு
வதக்கி அரைக்க
• சின்ன வெங்காயம் - 20
• வரமிளகாய் - 4
• மிளகு - 1 டீஸ்பூன்
• சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
• சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
• பட்டை - 4 சிறிய துண்டுகள்
• கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
• மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
• மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
• தேங்காய் துறுவல் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* காளானை கழுவி நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வதக்கி எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, சோம்பு, கசகசா, பட்டை சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* பின்பு அதில் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
* இது ஆறியதும் நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
* அரைத்த விழுதுடன் காளான் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை விடவும்.
* பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து விட்டு அத்துடன் குக்கரில் உள்ள குழம்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இது கொங்கு நாட்டு கோழி குழம்பு செய்முறை. நான் கோழிக்கு பதிலாக காளான் சேர்த்துள்ளேன்.