Sunday, November 7, 2010

பருப்பு சட்னி

பருப்பு சட்னி

தேவையானப் பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தேங்காய்த்துருவல் - 1/2 மூடி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்து, கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து எடுத்து, புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

தக்காளி சட்னி

தேவையானப் பொருட்கள்
தக்காளி - 4,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 5,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:
தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.

வெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment