Sunday, November 7, 2010

தேங்காய் சட்னி

தேவையானப் பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/2 கப்
பொரிகடலை - 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
கடுகு - தாளிப்புக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு

செய்முறை
முதலில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் (காம்பை நீக்கிவிடவும்) பொரிகடலை,உப்பு, புளி இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியின் மேல் ஊற்றி கலக்கவும்.

No comments:

Post a Comment