Sunday, November 7, 2010

தேங்காய் சட்னி II

தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 6
பொட்டுக்கடலை - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
பூண்டு - 3 பல்
புதினா இலை - 3
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, பாதி கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மீதி கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கி, அரைத்த சட்னியில் கொட்டவும்

No comments:

Post a Comment