Sunday, November 7, 2010

கேரட் சட்னி

கேரட் சட்னி

தேவையான பொருட்கள்:

கேரட் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவு

செய்முறை:

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.

கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.

கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.

1 comment:

  1. கேரட் சட்னி, கேரட் அல்வா, கேரட் சாதம், மேலும் கேரட் உணவுவகைகளை தெரிந்துகொள்ள பார்வையிடுங்கள் http://www.valaitamil.com/carrot-chutney_8272.html

    ReplyDelete