Sunday, November 7, 2010

எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் - 2 கப்
(அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி
பெருங்காயம் -வாசனைக்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
காய்ந்த மிளகாய் - 1
இஞ்சி -1 சிறியதுண்டு பொடியாக அரிந்தது
கொத்தமல்லித் தழை ; சிறிது,
துருவிய தேங்காய் ; 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

*எலுமிச்சை பழத்தை பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*கலவை சிறிது நேரம் கொதித்தபின் ஆறவிட்டு சாதத்தை போட்டு கிளறி 1 மணிநேரம் கழித்து பறிமாறவும்.

* மேலும் ருசிக்க, பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்தோ, துருவிய கேரட்டை வதக்கியோ சேர்க்கலாம். எல்லாம் கலந்த பிறகு எலுமிச்சை பழம் பிழிந்து, நன்றாகக் கலந்து பரிமாறவும்

பி.கு:

1. பழம் புளிப்பாக இருந்தால் 2 பழம் போதும்.
2.கலவை ரொம்ப நேரம் கொதிக்ககூடாது,அப்படி ஆனால் கசக்கும்.
3.சாதத்தை கிண்டிய பிறகு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடறோமோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
4.தாளிக்கும் போது வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

ஒரு கிண்ணத்தில் உப்புத்தூள், மஞ்சள் தூள் இட்டு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் கலந்து அதிள் எலுமிச்சை பிழிந்து வைத்துக்கொண்டால் கசக்காது. வெறும் வாணலியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்து வைக்கவும்,

No comments:

Post a Comment