அதிரசம்(கச்சாயம்)
தேவையானவை
பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
* அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
* வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
* அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
* மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
* வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
* இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
* மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
* 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.
Monday, November 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment