முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
• முட்டை - 4
• பெரிய வெங்காயம் - 2
• தக்காளி - 1
• பூண்டு - 10 பல்
• மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
• மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
• கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
• எண்ணெய் - 4 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
தேவையான பொருட்கள்
1. முட்டை - 4 ( வேக வைத்து வெட்டியது)
2. சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது.
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு
7. கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெயில் வறுத்து அரைக்க:
1. மல்லி - 2 தேக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 3
3. பூண்டு - 2 பல்
4. இஞ்சி - 1/2 இன்ச்
5. மிளகு - 1 தேக்கரண்டி 6. சீரகம் - 1 தேக்கரண்டி 7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி 8. அரிசி - 1/2 தேக்கரண்டி 9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை
தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
Showing posts with label அசைவம். Show all posts
Showing posts with label அசைவம். Show all posts
Sunday, November 7, 2010
Subscribe to:
Posts (Atom)